‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலையா முந்திரிக்கா’, ‘மூணே மூணு வார்த்தை’, ‘கேடி என்கிற கருப்புதுரை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மதுமிதா, தற்போது ‘லவ் ஆல்வேஸ்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். கவுரி கிஷன், ஜெயபிரகாஷ், ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தத் தொடர், கொரிய வெப் தொடரான ‘ஹியர் வி கோ அகைன்’ தழுவலாக உருவாகியுள்ளது. வரும் 30-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
Add a Comment
