நடிகரும் இயக்குநருமான சேரன், ‘டோரதி’ படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சினிமாவில் பலரும் படத்தைப் பாராட்டியுள்ள நிலையில், படம் பார்த்த பிறகு தனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சி தன்னுடைய ரசிக மனநிலையை உணர்த்தியது. இளையராஜாவின் பின்னணி இசை நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைக்கதையுடன் இணைந்து பிரமிக்க வைத்ததாகவும் பாராட்டியுள்ளார். மனிதர்களை எந்த அடையாளமும் இல்லாமல் நேசிக்கத் தொடங்கும் உலகமே சொர்க்கம் என்றும், தற்காலிக வெற்றி, தோல்விகளை வைத்து ஒருவரை அடையாளப்படுத்தும் கலாச்சாரம் அசிங்கமானது என்றும் சேரன் தெரிவித்துள்ளார். மேலும், நல்ல படைப்பை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Add a Comment
