Advertisement

பகத் பாசில் – பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் ‘அசரீரி’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘96’, ‘மெய்யழகன்’ போன்ற உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் சி. பிரேம் குமார், தனது அடுத்த படத்திற்காக மலையாள நடிகர் பகத் பாசிலுடன் இணைந்துள்ளார். இக்கூட்டணியில் உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், பிரேம் குமாரின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு அதிரடியான ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் நடிகை ஷிவதா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்குப் பலம் சேர்த்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவே இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

‘அசரீரி’ திரைப்படம் வரும் 2027 ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply