Advertisement

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ திரைப்பட டிரெய்லர்!

இயக்குனர் நிகில் முரளி, தற்போது ஆர்யா நடிப்பில் ‘ஹலோ காதல்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நிகிலா விமல் மற்றும் தெலுங்குப் படமான ‘பேபி’ மூலம் பிரபலமான வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர். தி ஷோ பீப்பிள் மற்றும் சில்வர் கிரைன் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

பயணத்தை மையமாகக் கொண்ட காதல் கதையாக இப்படம் உருவாகியிருப்பதை டிரெய்லர் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. காதல், நகைச்சுவை மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் நிறைந்த இப்படத்திற்கு இயக்குநர் ஹலிதா ஷமீம் கூடுதல் திரைக்கதை மற்றும் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. டிரெய்லரின் பின்னணி இசையும் கவனம் ஈர்த்துள்ளது. ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பினு நெப்போலியன் படத்தொகுப்பு செய்துள்ளார். இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply