Advertisement

குடும்பத்தினரை விமர்சித்தால் போராளியாக மாறுவேன் – ராஷ்மிகா மந்தனா!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் தேவையற்ற ட்ரோல்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், பொதுவாழ்வில் இருப்பதால் தன்னைப் பற்றிய விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும், ஆனால் தனது குடும்பத்தினரைப் பற்றி அவதூறாகப் பேசுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். தனது குடும்பத்தினரைத் தாக்கினால் முழுப் போராளியாக மாறிவிடுவேன் என்றும், அன்புக்குரியவர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply