Advertisement

‘இரண்டு வானம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘இரண்டு வானம்’. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மலையாளத் திரையுலகின் பிரபல நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஆத்தி என்னாலே முடியலையே’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. லவர்தன் எழுதியுள்ள இப்பாடலை நாட்டுப்புறக் கலைஞரும் பிரபலப் பாடகருமான அந்தோணி தாசன் மற்றும் தீப்தி சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர்.

Add a Comment

Leave a Reply