ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கயாடு லோஹர், மோகன்பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘தி பாரடைஸ்’ படம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி பான் இந்தியா முறையில் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு வெளியான ஆரம்ப விமர்சனங்களில் நெகட்டிவ் கருத்துகளே அதிகமாக இருந்தன.
ஆனால் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தெலுங்கு ரசிகர்கள் படத்திற்கு வரவேற்பு அளித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தெலுங்கு மாநிலங்களில் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து, ரூ.100 கோடியை கடந்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக இரண்டாம் நிலை ஹீரோக்களின் படங்களில் முதல் நாள் வசூல் அடிப்படையிலும் இப்படம் சாதனை படைத்ததாக சொல்லப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி உலகளவில் ‘தி பாரடைஸ்’ ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சுமார் ரூ.10 கோடி வசூல் கிடைத்தால் படம் பிரேக் ஈவன் நிலையை எட்டும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற மொழிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைத்திருந்தால் ரூ.200 கோடியை எட்டியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
—
