94 வயதிலும் சினிமா மீதான ஆர்வத்தை விடாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டிருந்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். சமீபத்தில் அவர் காலமானது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் கமல்ஹாசனை வைத்து ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் இயக்கிய கடைசி படமான ‘சிங் கீதம்’ வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் தயாரித்திருந்தார். சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு குறித்து பேசிய நாக் அஸ்வின், வயதான நிலையிலும் அடுத்த படத்தை உருவாக்கும் பணிகளில் அவர் ஆர்வமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக இயக்கவிருந்த அந்தப் படத்திற்கு ‘Fruit Cuts the Knife’ என்ற வித்தியாசமான தலைப்பையும் சிங்கீதம் சீனிவாச ராவ் தேர்வு செய்திருந்தாராம். இதனை நாக் அஸ்வினுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்தப் புதிய படத்தை முழுமையாக உருவாக்க முடியாமல் அவர் மறைந்தது வருத்தமளிப்பதாக திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.
—
