ஷகத் இயக்கத்தில் பார்வதி திருவோத்து, சித்தார்த் பரதன், மாத்யூ தாமஸ், உன்னி மாயா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிரதம் த்ரிஷ்டிய குட்டக்கார்’. காவல் நிலையத்தில் காவல்துறையினரால் நடைபெறும் அதிகார அத்துமீறல்களை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, காவல் அதிகாரியாக பார்வதி திருவோத்து நடித்த கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர். இந்நிலையில், இப்படம் வரும் அக்டோபர் 9-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Add a Comment
