Advertisement

“தனுஷ் ஒரு அசாதாரண கலைஞர்”… அமிதாப் பச்சன் புகழாரம்!

தனுஷின் நடிப்புத் திறமையைப் பாராட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் 18-வது சீசனில் பங்கேற்ற ரசிகர் ஒருவர், தான் தனுஷின் தீவிர ரசிகர் என்று அமிதாப்பிடம் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்த அமிதாப், தானும் தனுஷின் ரசிகர் எனக் கூறி அவரைப் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

“2015-ல் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அவரைப் பற்றி ஏற்கெனவே நிறைய கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அவருடன் பணியாற்றி அவரது நடிப்பைப் பார்த்தபோதுதான் அவர் உண்மையிலேயே ஒரு அசாதாரணமான கலைஞர் என்பதை உணர்ந்தேன்” என்று பாராட்டியுள்ளார்.

பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் அமிதாப் பச்சன், தனுஷ் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்தில் கிடைத்த அனுபவத்தை நினைவுகூர்ந்து அமிதாப் தனுஷைப் பாராட்டியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply