தெலுங்கில் ‘மேட்’, ‘மேட் ஸ்கொயர்’ ஆகிய படங்கள் மூலம் இளம் ரசிகர்களிடம் பிரபலமான ராம் நிதின், தற்போது தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் கார்த்திக் ஜெய் பழனி இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். பிரார்த்தனா நாதன், தேஜு அஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர்.
காதல் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து, வணிக ரீதியான அம்சங்களுடனும் இப்படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை, ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனத்தின் கே.எஸ்.சினிஷ், ரெடாக்டட் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
ராம் நிதின் தமிழில் ஏற்கும் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு, தொழில்நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பான விவரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளன.
