சென்னையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பயணத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதுடன், மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சாலை வழியாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த பிறகு, இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி சார்பில் கடந்த 2024ம் ஆண்டு இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அக்டோபர் 11ம் தேதி இந்த மையம் திறக்கப்பட உள்ளது.
—
