2017ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கிய இந்த பேண்டஸி காமெடி திரைப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான பணிகளும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.
‘மரகத நாணயம் 2’ படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தைத் தொடர்ந்து இந்த பாகத்தையும் ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் படப்பிடிப்பு நிறைவு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
