‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள புதிய படம் ‘ஓம்’. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷாவும் தமிழில் நடித்துள்ளார்.
முன்னதாக அக்டோபர் 16ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு மறுநாள் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ வெளியாக இருந்ததால் ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது படக்குழு புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி ‘ஓம்’ நவம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதே நாளில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ படமும் வெளியாகிறது.
—
