ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
படம் வெளியான நிலையில், கடந்த சில நாட்களாக தன்னையும் ‘சிக்மா’ படத்தையும் குறிவைத்து சமூக வலைதளங்களில் எதிர்மறையான பதிவுகள் திட்டமிட்டு வெளியிடப்படுவதாக சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதும், இதற்காக யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதும் தனக்கு நன்றாக தெரியும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் தன்னை விட சம்பந்தப்பட்டவர்களுக்கே அதிக இழப்பு ஏற்படும் என எச்சரித்துள்ள சந்தீப் கிஷன், அவர்கள் நேரடியாக சிக்கினால் பலரும் அதில் மாட்டிக்கொள்ள நேரிடும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சந்தீப் கிஷனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
