ஹிந்தி ‘த்ரிஷ்யம் 3’ பார்த்துவிட்டு மோகன்லால் என்ன சொல்ல போகிறார் தெரியவில்லை? – அஜய் தேவ்கன் எதிர்பார்ப்பு!

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் மூன்று பாகங்களும் மலையாளத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இதன் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடித்த நிலையில், முதல் இரண்டு பாகங்களும் அங்கு நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது மூன்றாம் பாகமும் வெளியாகியுள்ளது.

இந்த முறை மலையாளப் பதிப்பை அப்படியே பின்பற்றாமல், இந்தி ரசிகர்களுக்காக கதையில் சில மாற்றங்களை செய்து புதிய திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். இதனால் இந்தி ‘த்ரிஷ்யம் 3’, மலையாளப் படத்திலிருந்து சில அம்சங்களில் மாறுபட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் படத்தை மோகன்லால் பார்க்க வேண்டும் என்பதற்காக அவரை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதாக அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். மூலக்கதையின் முக்கிய நடிகரான மோகன்லால் படத்தை பார்த்து தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது மோகன்லால் விடுமுறையில் இருப்பதால், படம் பார்த்த பிறகு விரைவில் தனது கருத்தை பகிர்வார் என எதிர்பார்ப்பதாகவும் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading