நடிகை சோபிதா துலிபாலாவும், நாக சைதன்யாவும் கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தங்களது சினிமா பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். சோபிதாவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோபிதா துலிபாலா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடு குறித்து பேசியுள்ளார். தற்போது தான் சாட் ஜிபிடி உடன் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும், தன்னைப் போலவே பெரும்பாலானோர் AI தொழில்நுட்பத்தில் மூழ்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏஐ அதிகப்படியான பயன்பாடு காரணமாக அன்றாட வாழ்க்கையில் சில முக்கியமான விஷயங்களுக்கு கூட போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சோபிதா கூறியுள்ளார். சில முக்கியமான நிகழ்வுகளுக்குக்கூட நேரம் செலவிட முடியாமல் போகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏழை பயன்பாடு சரியா, தவறா என்பது வேறு விஷயம் என்றாலும், எந்த விஷயமும் எல்லை தாண்டிச் செல்லக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக சோபிதா தெரிவித்துள்ளார். AI பயன்பாட்டுடன் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அவரது கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.
