‘ஜெயிலர் 2’ படத்தின்‘பிந்தாஸ்’ பாடல் வெளியீடு… VIBE-ல் ரசிகர்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் 2 படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்காவது பாடலாக ‘பிந்தாஸ்’ வெளியாகியுள்ளது. இந்த பாடலில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி நடனமாடியுள்ளார்.

இதற்கு முன்பு வெளியான மூன்றாவது பாடலான ‘ஒன் நேம்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள ‘பிந்தாஸ்’ பாடலும் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு உருவாகியுள்ள இரண்டாம் பாகம் என்பதால், ரிலீஸை முன்னிட்டு படத்தின் பாடல்கள் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading