“அப்பாவின் வாழ்க்கை பகவத் கீதை, ராமாயணம் போல!” – சவுந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம் திரைப்படத்துறையில் மட்டுமல்லாமல், பலருக்கும் ஊக்கமளிக்கும் கதையாக இருந்து வருகிறது. பஸ் கண்டக்டராக தொடங்கி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள் மற்றும் அனுபவங்களை தொகுத்து சுயசரிதை எழுதும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சுயசரிதையை புத்தகமாக வெளியிடுவதுடன், அவரது வாழ்க்கையை வெப் சீரிஸாக உருவாக்குவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ரஜினிகாந்தின் சுயசரிதை குறித்து அவரது மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு, தனது தந்தையின் சுயசரிதையை பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்றதாக பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முதலில் ரஜினிகாந்த் தனது வாழ்க்கையை எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்றும், அதன் பின்னர் அந்த வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக உருவாக்கலாம் என்றும் சவுந்தர்யா கூறியுள்ளார். அவரது இந்தப் பதில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading