ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. லைகா மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் மற்றும் ஹைஸ்ட் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது தணிக்கைக்குழு தொடர்பான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ‘சிக்மா’ திரைப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து திட்டமிட்டபடி அக்டோபர் 2ஆம் தேதி ‘சிக்மா’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
—
