நாகார்ஜுனா தனது திரைப்பயணத்தின் 100வது படத்தில் நடித்து வருகிறார். ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஆகாசம்’ படங்களை இயக்கிய ரா. கார்த்திக் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘கிங் 100’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் நட்சத்திர பட்டியலில் மற்றொரு முக்கிய நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அசோக் செல்வன் நாகார்ஜுனாவுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, நடிகை தபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகார்ஜுனாவின் 100வது படம் என்பதால், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
