நானி நடிப்பில் சுஜீத் இயக்கி வரும் புதிய படத்திற்கு ‘ப்ளடி ரோமியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. கேங்க்ஸ்டர் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் ஆக்ஷன் மற்றும் டார்க் காமெடி அம்சங்களுடன் உருவாகிறது.
நானியின் பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் புரோமோ வெளியிடப்பட்டது. ‘லியோ’ பட பாணியில் உருவாக்கப்பட்டிருந்த அந்த அனிமேஷன் வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதில் சமையல் கலைஞர் மற்றும் கேங்க்ஸ்டர் என மாறுபட்ட பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் நானி நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், பிருத்விராஜ் சுகுமாரன் வில்லனாகவும் நடிப்பதாக முதலில் தகவல்கள் பரவின. தற்போது படக்குழு தரப்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, நானிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் பிருத்விராஜ் சுகுமாரனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ப்ளடி ரோமியோ’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நானி – சுஜீத் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய களத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
—
