ரசிகர் மன்றத்தின் நலத்திட்டப் பணிகள் – விஜய் சேதுபதி வெளியிட்ட நன்றி வீடியோ!

விஜய் சேதுபதி தனது அகில இந்திய நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் பிரசாத்தை புதிய தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருந்தார். ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, மாவட்டம் மற்றும் மண்டல அளவில் அமைப்புப் பணிகளை மேற்கொள்வது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பணிகள் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக விஜய் சேதுபதி அரசியலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளா என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்தன. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் சார்பில் நடைபெற்ற ஒரு பாராட்டு நிகழ்ச்சி கவனம் பெற்றுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை பாராட்டி, அவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு விஜய் சேதுபதி தற்போது தனது நன்றியை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை பாராட்டி பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கிய அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading