நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவிளையாடல் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

அருட்செல்வர் ஏபி.நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் எப்படிப்பட்ட வெற்றியை குவித்த திரைப்படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. சிவாஜி, சாவித்திரி, டி எஸ் பாலையா முத்துராமன், நாகேஷ், தேவிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் எழுத கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

மாபெரும் வெற்றி படமாக அமைந்த இப்படத்தை நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா மறு வெளியீடு செய்ய இருக்கிறார். அதையொட்டி திருவிளையாடல் படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வியாழக்கிழமை நடிகர் திலகம் சிவாஜியின் 99 ஆவது பிறந்தநாள் அன்று கேசினோ திரையரங்கில் நடைபெற இருக்கிறது

இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திருவிளையாடல் பட தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகனான ஏ.என். பரமசிவம், நடிகரும் படத் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நடிகர் மகேந்திரன் , நடிகர் இளவரசு, நடிகை வடிவுக்கரசி, நடிகரும் இயக்குனருமான அண்ணாதுரை கண்ணதாசன், கதாசிரியரும் இயக்குனருமான பூபதி ராஜா , முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர்‌

சிவாஜியின் தீவீர ரசிகரான பி.வி.முரளி இப்படத்தின் வெளியீட்டை ஒருங்கிணைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading