“என் கல்யாணம் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை?” – அஞ்சலி OPEN TALK!

தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக வலம் வரும் நடிகை அஞ்சலி. தற்போது இவர் நடித்துள்ள‘ஏழு கடல் ஏழு மலை’ அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அஞ்சலியிடம் திருமணம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. சில காலமாக இந்தக் கேள்விகள் குறைந்திருந்த நிலையில், தற்போது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மீண்டும் அதே கேள்வி அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த அஞ்சலி, தன்னை நேரில் சந்திக்கும் பலரும் முதலில் திருமணம் எப்போது என்று கேட்பதாக தெரிவித்துள்ளார். தனது திருமணத்தை எப்போது நடத்த வேண்டும் என்பதை தான் முடிவு செய்து கொள்வேன் என்றும், அதில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என்பது புரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

திருமணம் என்பது ஒருநாள் நிகழ்ச்சி மட்டும் கிடையாது என்றும், அதற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுவதுடன், பல விஷயங்களை தியாகம் செய்ய வேண்டிய சூழலும் இருக்கிறது என்றும் அஞ்சலி தெரிவித்துள்ளார். இத்தனை பொறுப்புகள் இருக்கும் நிலையில், ஏன் மீண்டும் மீண்டும் திருமணம் பற்றியே கேட்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தனக்கு திருமணம் நடக்கும் நேரத்தில் மனதார வாழ்த்தும் சிலர் இருந்தாலே போதும் என்றும், பெரிய கூட்டத்துடன் ஆடம்பரமாக திருமணம் நடத்த வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இல்லை என்றும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading