விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘பத்தா’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணையும் மூன்றாவது படமாக இது உருவாகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தை அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 – சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம், சாய் அபயங்கரின் இசை என படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே உருவாகியுள்ளது.
அக்டோபர் 1-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘மொழியே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியிருக்கிறார். பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப் பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
—
