“நான் ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை… நல்ல நடிகனாக பாருங்கள்!” – ஃபஹத் பாசில்

சஷாங்க் எலேட்டி இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’. ஷோபு எர்லகடா மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படத்தில் சாரா என்ற சிறுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

படத்தின் கதையைப் பற்றி பேசிய ஃபஹத் பாசில், ஒரு மனிதன் பேயை கடத்தினால் என்ன நடக்கும் என்பதை மையமாகக் கொண்ட கதை இது என்று தெரிவித்துள்ளார். அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். தெலுங்கில் இதுவரை தனக்கு பெரிய அளவில் ஓபனிங் கிடைக்கவில்லை என்று தெரிவித்த ஃபஹத், ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படத்தின் மூலம் அங்கு தனது வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.‌தன்னை ஹீரோவாகவோ வில்லனாகவோ பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தன்னை ஒரு நல்ல நடிகராக மட்டுமே ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.

மேலும், முன்னணி கதாநாயகிகளுடன் அதிகமாக இணைந்து நடிப்பதில்லை என்றும், தன்னுடன் நடிக்க கதாநாயகிகள் பயப்படுகிறார்களா என்றும் கேட்கப்பட்டபோது, அதற்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என சிரித்தபடி பதிலளித்தார். தன்னுடன் நடிக்க அவர்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம் என்றும், இதற்கெல்லாம் இயக்குநர்கள்தான் காரணம் என்றும் ஃபஹத் பாசில் நகைச்சுவையாகக் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading