‘ஜெயிலர் 2’ இசை வெளியீட்டு விழா எங்கே எப்போது? வெளியான புதிய தகவல்!

ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியீட்டை நெருங்கி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு உருவாகும் இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் மீண்டும் கேமியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏற்கனவே ‘அல்ல போலேலோ’, ‘ஒன் மூன்… ஒன் சன்’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழா தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading