‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ படப்பிடிப்பு ஆரம்பம்– வெளியான அப்டேட்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021-ல் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்யாவுடன் துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் பேசப்பட்டன.

இதையடுத்துதற்போது அதற்கான படப்பிடிப்பும் தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம், முதல் பாகத்திற்குப் பிறகு நடக்கும் கதையாக இல்லாமல், அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சொல்லும் ப்ரீக்வெல் படமாக உருவாகிறது.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அம்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் தொடங்கியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ஆர்யா களமிறங்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.‌படப்பிடிப்பு தொடங்கிய தகவலை ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ‘சார்பட்டா பரம்பரை’ ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading