மணிகண்டனின் அடுத்த படமான ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், படம் டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் குமார் இயக்கும் இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிப்பவர்கள் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
‘மக்கள் காவலன்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் மணிகண்டன் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லட்சியம், மன உறுதி மற்றும் பல்வேறு தடைகளை தாண்டி முன்னேறுவதற்கான துணிச்சல் ஆகியவை படத்தின் கதையின் முக்கிய அம்சங்களாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு மணிகண்டன் நடிக்கும் இந்தப் படம், அவரது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு ஆக்ஷன் ஹீரோவாக அவரை காட்டும் வகையில் உருவாகி வருகிறது.
—
