உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஆக்ஷன் நடிகர் ஜாக்கி சான், சாகச சண்டைக் காட்சிகள் மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்தவர். அவரது திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில், ஜாக்கி சானின் உடல்நிலை குறித்து நேற்று சமூக வலைதளங்களில் அவர் காலமானதாக தகவல்கள் வேகமாக பரவின. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து பல பதிவுகளையும் வெளியிட்டனர்.
இதனிடையே, 72 வயதான ஜாக்கி சான் நல்ல உடல்நலத்துடன் ஹாங்காங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ‘ஆர்மர் ஆஃப் காட் 4: அல்டிமேட்டம்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் ‘ரஷ் ஹவர் 4’ படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ஜாக்கி சானின் உடல்நிலை தொடர்பாக பரவிய தகவல்கள் வதந்தி என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
—
