சிவகார்த்திகேயன் – ‘பார்க்கிங்’ இயக்குநர் கூட்டணி…வெளியான ‘SK27’ அதிகாரபூர்வ அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை ஏற்கனவே நடைபெற்ற நிலையில், தற்போது SK27 குறித்த புதிய அறிவிப்பை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்திய அறிவிப்பில், SK27 தனக்கு ஒரு திரைப்படம் மட்டுமல்ல என்றும், இன்று தொடங்கும் ஒரு கனவு என்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தனது புதிய அத்தியாயத்தை தொடங்குவது பெரும் பாக்கியம் என்றும், அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘பார்க்கிங்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன் – சிவகார்த்திகேயன் கூட்டணி குறித்த இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading