தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்திய பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனுஷ் – மம்மூட்டி இடையிலான திரை புரிதல் குறித்துப் பேசிய அவர், இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவை இயல்பாக வெளிப்படுத்தும் வகையில் சரியான நடிகர்களைத் தேர்வு செய்ய வேண்டியிருந்ததால், மம்மூட்டி மற்றும் சாய் பல்லவியை இப்படத்தில் இணைத்ததாகவும் கூறியுள்ளார். இதனால் தனுஷ் – மம்மூட்டி கூட்டணியைத் திரையில் காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மேலும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் சாரும் ஸ்ரீலீலாவும் இணைந்து நடனமாடுவது போன்ற ஏ.ஐ. புகைப்படங்களைப் பார்த்தேன். ஆனால், படத்தில் அப்படியொரு பாடல் கிடையாது. ‘அலாகலோவா’ பாடல் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்படவில்லை. கதையின் சூழலுக்கு அந்தப் பாடல் அவசியமாக இருந்தது. அதுதான் படத்தில் இடம்பெறும் ஒரே நடனப் பாடல்” என்று விளக்கமளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ராஜ்குமார் பெரியசாமி, “தனுஷ் சாரும் ஸ்ரீலீலாவும் இணைந்து நடனமாடுவது போன்ற ஏ.ஐ. புகைப்படங்களைப் பார்த்தேன். ஆனால், படத்தில் அப்படியொரு பாடல் கிடையாது. ‘அலாகலோவா’ பாடல் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்படவில்லை. கதையின் சூழலுக்கு அந்தப் பாடல் அவசியமாக இருந்தது. அதுதான் படத்தில் இடம்பெறும் ஒரே நடனப் பாடல்” என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், படத்தின் தலைப்புக்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பதி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு கோவில் நகரங்களுக்கு இடையே கதை நடைபெறுவதாகக் கூறியுள்ளார். சாய் பல்லவி நடித்துள்ள நித்யா ரெட்டி கதாபாத்திரம் ‘ஓம்’ என்ற பெயரில் ஓர் ஆபரேஷனைத் திட்டமிடுவதாகவும், படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஆன்மிகம் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
