ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தில் பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோகி பாபு, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் இடம்பெறும் சிறப்பு தோற்றங்களிலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அந்த வகையில், நடிகை கேத்ரின் தெரசா ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.
தற்போது ‘சிக்மா’ படத்தின் நான்காவது பாடலான ‘சுலோச்சனா’ வெளியாகியுள்ளது. சூப்பர் சுப்பு வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை சான்வி சுதீப் பாடியுள்ளார். பாடல் காட்சிகளில் கேத்ரின் தெரசாவின் நடனமும் இடம்பெற்றுள்ளது. ‘சுலோச்சனா’ பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
