டேட்டிங் ஆப் உலகில் காதல்! ஐஸ்வர்யா லட்சுமி – அர்ஜுன் தாஸின் ‘லவ்’ டிரெய்லர் வெளியானது

ஐஸ்வர்யா லட்சுமி, அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள புதிய ரொமாண்டிக் வெப் தொடரான ‘லவ்’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நவீன கால காதல் மற்றும் உறவுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடரை ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘மாரி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.

டேட்டிங் ஆப் மூலம் உருவாகும் உறவுகளை பின்னணியாகக் கொண்ட இந்த தொடரில் ஐஸ்வர்யா லட்சுமி ‘தாரா’ என்ற கதாபாத்திரத்திலும், அர்ஜுன் தாஸ் ‘மேத்யூ ஜெபராஜ்’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரு உறவில் ஒருவருக்கொருவர் இடையிலான கெமிஸ்ட்ரி முக்கியமா அல்லது இருவரின் பொருத்தமான குணநலன்கள் முக்கியமா என்ற கேள்வியை மையமாக வைத்து இவர்களின் காதல் கதை நகர்கிறது.

ஐஸ்வர்யா லட்சுமி – அர்ஜுன் தாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் வெப் தொடராக இது அமைந்துள்ளது. இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்த தொடரை சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இந்நிலையில், ‘லவ்’ தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 2-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த தொடர், தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading