‘டோரதி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவை பாராட்டி பதிவிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான படைப்பாக இப்படம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், துணிச்சலுடனும் உணர்வுப்பூர்வமாகவும் படம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களின் பங்களிப்பையும் பாராட்டிய தனுஷ், இசைஞானி இளையராஜாவின் இசை வியக்க வைக்கும் வகையில் இருப்பதாகவும், அது ‘ருத்ரதாண்டவம்’ போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாளை படம் வெளியாக உள்ள நிலையில், தனது நண்பர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ‘டோரதி’ படக்குழுவினருக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Add a Comment
