குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலில் தனுஷ் தரிசனம்!

நடிகர் தனுஷ் இன்று அதிகாலை தனது மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் பெற்றோர், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனிக்கு சென்றார். காலை 6 மணியளவில் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்ற அவர், அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கேற்று பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்தார். சிறப்பு வழிபாடுகளை முடித்த பின்னர் சிறிது நேரம் கோவிலில் இருந்த தனுஷ், ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு திரும்பினார். அப்போது அவரை பார்த்த ஏராளமான பக்தர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading