ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக புதிய நிகழ்ச்சி ஒன்று விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. ‘மாஸ் பசங்க கிளாஸ் பொண்ணுங்க’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆர்யா மற்றும் ரெஜினா நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பான முதல் புரொமோ வெளியாகி, புதிய நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Add a Comment
