சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘புது வசந்தம்’ தொடர் 1000 நாட்களை கடந்து ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஷியாம் மற்றும் சோனியா சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்தத் தொடர், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. பகல் நேரத் தொடர்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 1000 நாட்களை கடந்துள்ள ‘புது வசந்தம்’ வரும் செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.
Add a Comment
