எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா… பிரம்மாண்டமான அறிமுக விழாவில் பங்கேற்கும் கமல்ஹாசன்!

கர்நாடக சங்கீதத்தின் மிக முக்கியமான ஆளுமையான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. பாரத ரத்னா விருது பெற்ற அவரது கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். ‘ஜெர்சி’, ‘கிங்டம்’, ‘மேஜிக்’ ஆகிய படங்களை இயக்கிய கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்க, அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்த புதிய திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி நாளை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் கமல்ஹாசன் படத்தை அறிமுகப்படுத்துகிறார். இதனால் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

திரையில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக தோன்றுவதற்கான பணிகளை ராஷ்மிகா ஏற்கனவே தொடங்கியுள்ளார். அவரது தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மேக்கப் டெஸ்ட் நடத்தப்பட்டதுடன், கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பு பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சினிமாவிலும் தடம் பதித்திருந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, தனது ஆரம்பகாலத்தில் ‘மீரா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற எந்த முக்கியமான காலகட்டத்தை படத்தின் மையமாக இயக்குநர் தேர்வு செய்திருக்கிறார் என்பது தற்போது வெளிவராமல் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடக சங்கீதத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது பல இசை ஆர்வலர்களுக்கும் எதிர்பாராத தகவலாக அமைந்துள்ளது.

—

Add a Comment

Leave a Reply