அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மதுமிதா இயக்கியுள்ள இந்தக் கிரைம் திரில்லரில் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் தோன்றுகிறார்.படத்தின் கதையை மதுமிதா, நிக்கோலஸ் செவாலியருடன் இணைந்து உருவாக்கியுள்ளனர். முஜீப் மஜீத் இசையமைக்க, பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பையும், தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளையும் கவனித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான கதாபாத்திர போஸ்டர்கள் மூலம் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சஞ்சனா நடராஜன் காவல்துறை அதிகாரி ஏ. ராவ் ஆகவும், ஜாரா வினீத் லக்கி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல், திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் படம் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 13-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.

Add a Comment

Leave a Reply