‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் சித்து – தர்ஷிகா கூட்டணி!

சித்து, தர்ஷிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாலாஜி இயக்கிய இந்தக் கிரைம் த்ரில்லர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘தி லாஸ்ட் கேஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.

மீண்டும் பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சித்து, தர்ஷிகா இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முந்தைய படத்தைப் போலவே இதையும் ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மலைப்பகுதியில் நடைபெறும் குற்றத்தையும் அதனைச் சார்ந்த புலனாய்வையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் பாலாஜி பேசுகையில், திரையரங்குகளில் வெற்றி பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதாகக் குறிப்பிட்டார். அதே மகிழ்ச்சியுடன் அடுத்த கிரைம் த்ரில்லராக ‘தி லாஸ்ட் கேஸ்’ உருவாகவுள்ளதாகவும், ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படம் அமையும் என்றும் தெரிவித்தார். பூஜை நிகழ்ச்சியில் குணச்சித்திர நடிகர் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கோபால், சரண், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Add a Comment

Leave a Reply