பல சவால்களை கடந்து உருவான ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் சித்து, தர்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் நடித்துள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் நாட்டார் கதை பின்னணியில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

கொலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள துப்பறியும் சம்பவங்களை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், முக்கூடல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதுவரை அதிகம் படமாக்கப்படாத இயற்கை பின்னணி கொண்ட இடங்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைக்க, லாவர்தன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன.

படம் பாதியில் நின்ற நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி முடிப்பது மனரீதியாக சவாலாக இருந்ததாக இயக்குநர் பாலாஜி தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் சரண், கோபால் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும், எந்த கேள்வியும் கேட்காமல் நடிக்க சம்மதித்த சித்து மீது தனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ரித்விகா இணைந்த பிறகு படத்தின் தரம் மேலும் உயர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது நேர்மையான விமர்சனங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்வதுடன் குறைகளை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading