“இவை ஏஐ புகைப்படங்கள் அல்ல…” 80ஸ் டிரெண்டில் இணைந்த நடிகை குஷ்பு!

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது 80-ஸ் போட்டோ டிரெண்ட் வேகமாக பரவி வருகிறது. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தற்போதைய புகைப்படங்களை 1980-களின் விண்டேஜ் தோற்றத்தில் மாற்றி பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த டிரெண்டில் நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார். அந்த காலகட்டத்தில் தான் எடுத்துக்கொண்ட உண்மையான 80-ஸ் புகைப்படங்களின் தொகுப்பை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

குஷ்பு வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “ஏஐ, மெட்டாவினால் உருவாக்கப்பட்டவை அல்ல. அசலான 80ஸ் புகைப்படங்கள்” என குஷ்பு குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading