மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘திரிஷ்யம்’ திரைப்படம் மலையாளத்தில் மூன்று பாகங்களாக உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் இரண்டு பாகங்கள் வெளியாகிய நிலையில், தற்போது மூன்றாம் பாகமான ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ உருவாகியுள்ளது. அபிஷேக் பதக் இயக்கியுள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Add a Comment
