உலகப் பிரீமியருக்கு தயாரான ‘டோரதி’ – கனடா சென்ற கார்த்திக் சுப்பராஜ்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படம் திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பாகவே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை பெற்றுள்ள நிலையில், இளையராஜாவின் பாடல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

செப்டம்பர் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘டோரதி’, கனடாவில் நடைபெறும் டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இன்று மாலை உலகப் பிரீமியர் செய்யப்படுகிறது. இதற்கான நிகழ்வில் பங்கேற்பதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் கனடா சென்றுள்ளனர்.

இந்த முக்கியமான தருணம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதளப் பதிவில், “கார்த்தி, சுப்பு மற்றும் நான்… டோரதியின் பயணம் இன்று ஆரம்பமாகிறது. ஒரு கனவு நனவாகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் இடம்பெறும் இரு நாயகர்களின் பெயர்களில் இருந்து ‘கார்த்தி’ மற்றும் ‘சுப்பு’ என்ற பெயர்களை உருவாக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply