இளையராஜாவை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ‘டோரதி’ படக்குழு..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், படத்தின் பிரிமீயர் காட்சி கனடாவின் டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்றது. இந்த சிறப்பு காட்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் கலந்து கொண்டனர். இதன் மூலம் திரைப்படம் சர்வதேச ரசிகர்கள் முன்னிலையில் முதல் முறையாக திரையிடப்பட்டுள்ளது.

திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான குழு புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், ‘டோரதி’யின் அழகான பயணம் தற்போது தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். படத்தைப் பார்த்த பிறகு தங்களுடன் உரையாடிய ரசிகர்கள் அனைவருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக கனடா செல்வதற்கு முன் தயாரிப்பாளர்களும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading