‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது நிறைவடைந்துள்ளது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் உற்சாகமாக “வருங்கால முதல்வர் SK” என கோஷமிட்டனர். இதைக் கேட்ட சிவகார்த்திகேயன், உடனடியாக தனது கையை அசைத்து அப்படி கூற வேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுக்கொண்டார். அவர் ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட அந்த தருணம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், சமீப காலமாக மற்ற சில முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
—
