அசோக் செல்வன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாக உள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
‘ஹேப்பி ஹை பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான கதையை ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அசோக் செல்வன் நடிப்பில் கடந்த சில காலமாக புதிய திரைப்படம் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது ‘அன்பில் அவன்’ திரைக்கு வருவது அவரது ரசிகர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
—
