மம்மூட்டி நடிக்கும் ‘மேளா’… வெளியான அறிவிப்பு!

ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தை மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் மம்முட்டியை இயக்கவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார். மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது இந்த புதிய படத்தின் பெயர் ‘மேளா’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தலைப்பு மலையாள சினிமா ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒன்றாகும். 1980-ம் ஆண்டு கே.ஜி. ஜார்ஜ் இயக்கத்தில் இதே பெயரில் திரைப்படம் வெளியானது. அதில் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகன் என்ற நிலையை நோக்கி மம்முட்டி முன்னேறிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் வெளியான அந்த திரைப்படம், அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது.

இப்போது நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக கடந்த நிலையில், மீண்டும் அதே தலைப்பு மம்முட்டியின் படத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம், புதிய படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் கம்பீரமான தன்மைக்கு ‘மேளா’ என்ற பெயர் பொருத்தமாக இருப்பதாக இயக்குநர் நிதிஷ் சகாதேவ் கருதியதுதான் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், 1980-ம் ஆண்டு வெளியான ‘மேளா’வின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் உருவாகவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading